Home உலகம் திடீரென வெடித்த பள்ளி மாணவியின் ஐபோன் !

திடீரென வெடித்த பள்ளி மாணவியின் ஐபோன் !

526
0
SHARE
Ad

IPhone-blasts-265

வாஷிங்டன், பிப் 4- அமெரிக்காவில் மாணவி வைத்திருந்த ஐபோன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரின் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர்   சட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்த ஐபோன், திடீரென வெடித்து தீப்பிடித்தது.  இதனால்,  அவளது ஆடையிலும் தீப்பிடித்தது.

#TamilSchoolmychoice

தீப்பிடித்த  மாணவி பயத்தில் கூச்சலிட்டதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக அவள் ஆடையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் அம்மாணவியின் தொடையில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.