இந்த நிலையில் தேமுதிகவின் அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ மற்றும் பா.ம.க.வின் எம்.எல்.ஏ. கலையரசு ஆகியோர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.ஏ. அணைக்கட்டு கலையரசுவை அக்கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசு, தொகுதியில் உள்ள கட்சியினருக்கு விரோதமாகவும், கட்சி வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வந்ததுடன்,
கட்சியின் கட்டுப்பாடடை மீறியும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பசுமை நாயகர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ம.கலையரசு நீக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.