Home கலை உலகம் நயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன்? -காஜல் பதில்!

நயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன்? -காஜல் பதில்!

700
0
SHARE
Ad

Kollywood-news-8558சென்னை, பிப் 28 – நயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள் என நடிக்கிறார் காஜல் அகர்வால். இதற்கிடையில் தங்கை கல்யாண ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறார். இவர் நண்பேன்டா எனற புதிய படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டார்.

இப்போது அந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒரு சில படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது.

நண்பேன்டா படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. நடிக்க எண்ணி இருந்தேன். ஆனால் எனது தரப்பில் அணுகிய நபர் சரியான பதில் தரவில்லை என்று கேள்விப்பட்டேன். தகவல் பரிமாற்றத்தில் நடந்த தவறால் அந்த வாய்ப்பை இழந்தேன்.

#TamilSchoolmychoice

அதேபோல் நீண்ட நாட்களுக்கு முன் கமல் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அவர்கள் கேட்ட தேதியில் வேறு படங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்ததால் அதிலும் நடிக்க முடியாமல் போனது. இதுபோல் சில சம்பவங்கள் எல்லோருக்குமே நடப்பது உண்டு என்றார் காஜல் அகர்வால்.