Home உலகம் இலங்கை அரசு நிர்வாகத்தில் ராஜபக்சேவின் குடும்ப ஆதிக்கம்-அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கை அரசு நிர்வாகத்தில் ராஜபக்சேவின் குடும்ப ஆதிக்கம்-அமெரிக்கா குற்றச்சாட்டு

535
0
SHARE
Ad

Tamil_Daily_News_84754145146வாஷிங்டன், பிப் 28 – இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுவதற்கென தீர்மானம் ஐ.நா.வில் கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையை வாஷிங்டனில் வெளியிட்டு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி,

இலங்கையில் சிறுபான்மையினர், சமூக அமைப்புகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் மீதான தாக்குதல் தொடர்வதாக குற்றம்சாட்டினார். மனிதாபிமான அடிப்படையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இலங்கையே மேற்கொள்ள நிர்பந்திக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன விவகாரம், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது போன்றவற்றில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இலங்கை நிர்வாகத்தை அதிபர் ராஜபக்க்ஷேவின் குடும்பம் ஆட்டிப்படைப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர், பொருளாதாரத்துறை மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் போன்ற முக்கிய பதவிகளை ராஜபக்க்ஷேவின் சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்க்ஷேவின் மகன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. மொத்தத்தில் ஜனநாயகத்தில் குரல்வளையை நெறிக்கின்ற நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெறுவதாக அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது.