இருப்பினும், சில கட்டணம் செலுத்தும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பயனீட்டாளர்களுக்கு மட்டும், அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டும் இந்த நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும்.
ஆஸ்கார் விருதுகளுக்கான ஒளிபரப்பு உரிமையைக் கொண்டிருக்கும் ஏபிசி நிறுவனம் (ABC) இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு முதல் கட்டமாக எட்டு கட்டணம் செலுத்தும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நாட்டின் எட்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும்.
வாட்ச் ஏபிசி ஐஓஎஸ்(Watch ABC iOS app) செயலியின் மூலமாக ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பின் பின்னணியில் நிகழும் சம்பவங்களை மேடைக்குப் பின்னால் இருக்கும் 15 புகைப்படக் கருவிகளின் மூலமாக கையடக்கக் கருவிகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஆஸ்கார் விருதளிப்பின் மேடைக்குப் பின்னால் நடைபெறும் சம்பவங்களின் (behind-the-scenes) நேரடி ஒளிபரப்புக்கு ‘சாம்சுங் கெலக்சி’ வணிக ஆதரவு நிறுவனமாகத் திகழ்கின்றது.
மேடைக்குப் பின்னால் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புக் காட்சிகள் நேரடி ஒளிபரப்பான பின்னர் ஏறத்தாழ 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து கையடக்கக் கருவிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆஸ்கார் விருதளிப்பின்போது நடைபெறும் இசைப் பாடல் நிகழ்வுகளும் கையடக்கக் கருவிகளில் நேரடி ஒளிபரப்பப்படும்.
ஆஸ்கார் நிகழ்வுகள் முடிந்த பின்னரும் அடுத்த 3 நாட்களுக்கு பயனர்கள் அந்த நிகழ்ச்சியை பதிவிறக்கம் செய்யும் வசதிகளை ஏபிசி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது