Home நாடு சீனாவிற்கு சென்ற விமானத்திற்கு நடந்த விபரீதம் என்ன ?

சீனாவிற்கு சென்ற விமானத்திற்கு நடந்த விபரீதம் என்ன ?

495
0
SHARE
Ad

MHஸ்370கோலாலம்பூர், மார்ச் 8- மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 வகை விமானம் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்று அடைந்து இருக்க வேண்டும். ஆனால் அந்த விமானத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் உரிய நேரத்தில் போய் சேரோமல் மாயமானது. இதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன ஆனது என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது. இச்சம்பவத்தில் அதிகாரப்பூர்வ தகவலை அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் கடலில் விழுந்திருக்கக்கூடும் என நம்பப்படும்  MH 370  வகை விமானத்தை பற்றிய எந்தவொரு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என மலேசிய விமானத்துறை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வியட்னாம் விமான சிக்னல் கட்டுப்பாட்டு அறை தகவல்

இதற்கிடையில் வியட்னாம் விமான கட்டுப்பாட்டு அறை,  இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது என அறிவித்துள்ளது. கோசு தீவு அருகே இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வியட்னாம் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலில் விழுந்து இருக்கலாம் என நம்பப்படும் அந்த விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களின் பட்டியல் பின்வருமாறு :

1. சீனர்கள் – 152 பேர் மற்றும் 1 குழந்தை

2. மலேசியர்கள் – 38 பேர்

3. இந்தோனேசியர்கள்  – 12 பேர்

4. ஆஸ்திரேலியர்கள்  – 6 பேர்

5. பிரான்ஸ் – 3 பேர்

6. அமெரிக்கர்கள் – 3 பேர் 1 குழந்தை

7.  நியூசிலாந்து – 2 பேர்

8. உக்ரைன் – 2 பேர்

9. கனடா – 2 பேர்

10. ரஷ்யா – 1 பேர்

11. இத்தாலி – 1 பேர்

12. தைவான் – 1 பேர்

13. நெதர்லாந்து – 1 பேர்

14. ஆஸ்திரியா – 1பேர்