Home நாடு போலி பாஸ்போர்ட் பயணிகள் விவகாரத்தில் புதிய திருப்பம்!

போலி பாஸ்போர்ட் பயணிகள் விவகாரத்தில் புதிய திருப்பம்!

498
0
SHARE
Ad
MAS logo 440 x 215

மார்ச் 9 – போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளதாக கூறப்படும் வெளிநாட்டினர் இருவரும் ஒரே இடத்தில் தங்களது பயணச் சீட்டை முன்பதிவு செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், காணாமல் போன மாஸ் MH370 விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளதாகக் கூறப்படும் இருவரும், சீனா சதர்ன் ஏர்லயன்ஸ் (China Southern Airlines) நிறுவனத்தின் மையத்தில் பயணச் சீட்டை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அவர்கள் இருவரும் பெய்ஜிங்கில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்வதற்கும் பயணச்சீட்டை பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

மாஸ் ஏர்லயன்ஸ் நிறுவனம் நேற்று பயணிகளின் பெயர் பட்டியலை வெளியிட்ட போது, அதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவரும், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்பட்டது.

காரணம் அந்த பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர்கள், அவர்களது நாட்டில் நலமாக உள்ளார்கள் என்றும், அவர்களின் பாஸ்போர்ட் ஒரு வருடத்திற்கு முன்னால் தொலைந்து விட்டது என்றும் அந்நாட்டு அரசாங்கங்கள் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.