Home இந்தியா மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் ருக்மணி செயற்கை கோள்!

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் ருக்மணி செயற்கை கோள்!

647
0
SHARE
Ad

ISRO_PSLV-C21ல்கத்தா, மார்ச் 12 – மலேசியாவிலிருந்து சீனா செல்லும் வழியில் மாயமான மலேசிய பயணிகள் விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் கடற்படைக்கு சொந்தமான செயற்கைகோள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் பயன்படுத்தப் படவுள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணியில் மலேசியா, பிலிப்பைன்ஸ் , சீனா உள்ளிட்ட ஒன்பது நாடுகளை சேர்ந்த விமானங்களும் 24 கப்பல்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நாடுகளைத் தவிர இந்தியாவின் கடற் படைக்கு சொந்தமான செயற்கை கோளான ருக்மணி உதவியுடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து இந்திய கப்பல் படை அதிகாரிகள் கூறியதாவது, விமானம் மாயமானதாக கூறப்படும் மலாக்கா நீரிணை  பகுதியில் இந்திய கப்பல் படை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கடல் விதிகளுக்கு உட்பட்டு மலாக்கா நீரிணை  பகுதியை சேர்ந்த நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளின் கடற் படையுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான செயற்கை கோள் பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய கடற் படையில் சேர்க்கப்பட்டுள்ள ருக்மணி செயற்கை கோள் முயற்சிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சுமார் 2 ஆயிரம் கடல் மைல் தூரம் வரையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சோதனை நடத்த முடியும். இந்த செயற்கை கோளுடன் 60 கப்பல்கள் மற்றும் 75 விமானங்கள் வரை இணைக்கப்பட்டுள்ளது. என கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.