Home இந்தியா கெஜ்ரிவாலுடன் உணவருந்த 10,000-ரூபாய் கட்டணத் தொகை அறிவிப்பு!

கெஜ்ரிவாலுடன் உணவருந்த 10,000-ரூபாய் கட்டணத் தொகை அறிவிப்பு!

519
0
SHARE
Ad

9213dfa4-cfe3-4947-94bf-92231906b391_S_secvpfநாக்பூர், மார்ச் 12 – ஆம் ஆத்மி கட்சிதலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இரவு உணவருந்துவதற்கான கட்டணம் நிர்ணயி்க்கப்பட்டுள்ளது. நாளை 13-ஆம் தேதி மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரண்டு நாட்கள் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவர் கட்சி சார்பில் நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் அஞ்சலி தமானியாவை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார். இதனையடுத்து 13-ஆம் தேதி கெஜ்ரிவாலுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக (மலேசியா-550வெள்ளி) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 150 முதல் 200 பேர் வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அமைப்பாளர் கிரிஷ் நந்த்காவோங்கர் மற்றும் செய்தி தொடர்பாளர் பிரஜக்தா அதுல் தெரிவித்துள்ளனர்.