Home இந்தியா பிற கட்சிகளுக்கு ஓட்டு போடுவது வீண்- ஜெயலலிதா !

பிற கட்சிகளுக்கு ஓட்டு போடுவது வீண்- ஜெயலலிதா !

493
0
SHARE
Ad

2-JAYALALITHA_5132fசென்னை, மார்ச் 12 – தேர்தல் பிரசாரத்தில், தேசிய பிரச்சனைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வந்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று  சிதம்பரத்தில் பேசும்போது  இரட்டை இலை தொடர்பாக, ஸ்டாலின் தொடுத்துள்ள வழக்கிற்கு  பதில் அளித்தார்.

மேலும், பிற கட்சிகளுக்கு ஓட்டு போட்டால், அது எதற்கும் உதவாது,  எனக்கூறி, மறைமுகமாக, பா.ஜ.க. கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்  என, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சிதம்பரத்தில், அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசியை ஆதரித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது, மக்கள் நலம், மக்கள் நலம் எனக் கூறி, உங்கள் ஓட்டுகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன், உங்கள் நலத்தை மறந்து விட்டார். நீங்களும், அவரை மறந்து விட்டீர்கள்.

#TamilSchoolmychoice

இதனால் விரக்தியடைந்த கருணாநிதி, தன் மகன் ஸ்டாலின் மூலம், தமிழகத்தில் எங்கெல்லாம், இரட்டை இலை போன்று தோற்றம் அளிப்பவை இருக்கிறதோ, அவற்றை எல்லாம் மறைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்திடமும், தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், காங்கிரஸ் கட்சி சின்னம் கை. அனைவரின் கைகளையும், வெட்டிவிட வேண்டும் என, ஸ்டாலின் மனு கொடுப்பாரா அல்லது கையுறைகளை போட்டு, கைகளை மறைத்து கொள்ள வேண்டும் என, மனு கொடுப்பாரா? சில கட்சிகளுக்கு, சைக்கிள் சின்னம் இருக்கிறது.

எனவே, யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மனு கொடுப்பாரா? ஒரு கட்சிக்கு, மாம்பழம் சின்னம் இருக்கிறது. எனவே, மாம்பழம் விற்பனையை தடை செய்ய வேண்டும் என, ஸ்டாலின் மனு கொடுப்பாரா? இது போன்றது தான் இரட்டை இலை சின்னமும். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது பழமொழி.

இதைபோல், அ.தி.மு.க.வை கண்டு அஞ்சும், தி.மு.க.வினருக்கு, எதை பார்த்தாலும், ‘இரட்டை இலை’ போலவே தெரிகிறது. அதனால் தான், ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். நான் சொல்வதை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஓட்டு என்பது, உங்கள் உரிமை. உங்கள் ஓட்டு, இந்த நாட்டின் சொத்து.

உங்கள் ஓட்டை வீணாக்கி விடாதீர்கள். வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டால், அது, எதற்கும் உதவாது. அவர்களும் வெற்றி பெற மாட்டார்கள். உங்கள் ஓட்டு வீணாகிப் போய்விடும். ஆனால், அ.தி.மு.க.விற்கு நீங்கள் ஓட்டு போட்டால், உங்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும் என முதல்வர் ஜெயலலிதா பேசினார்.