வாஷிங்டன், மார்ச் 12 – அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில், பாஸ்போர்ட் தொடர்பான வேலைகளை முடித்து கொடுக்கும் பிஎல்எஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் இந்தியர்களின் 70 பாஸ்போர்ட்கள் பல்வேறு வேலைக்காக வாங்கி, பாதுகாப்பாக அலுவலகத்தில் வைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 70 இந்திய பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஆவணம் போன்றவை திருடுபோனது. இதுபற்றி அந்நிறுவன அதிகாரிகள் காவலர்களிடம் புகார் செய்தனர். இதையடுத்து காவலர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணை நடத்தினர்.
ஆனால் பாஸ்போர்ட் மாயமானது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், காணாமல் போன 70 பாஸ்போர்ட்டுகளையும் ரத்து செய்தது.