Home உலகம் தலிபான்களோடு அமைதி பேச்சுவார்த்தை குழுவில் பங்கேற்க இம்ரான்கான் சம்மதம்!

தலிபான்களோடு அமைதி பேச்சுவார்த்தை குழுவில் பங்கேற்க இம்ரான்கான் சம்மதம்!

501
0
SHARE
Ad

2bfb01c8-206b-4214-8ad2-13a4220abff4_S_secvpfஇஸ்லாமாபாத், மார்ச் 12 – தலிபான்களோடு பாகிஸ்தான் அரசு நடத்தி வரும் அமைதி பேச்சு வார்த்தை குழுவில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் சம்மதம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு, தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு நடத்த முன்வந்தது. இதற்கு ஆப்கானிஸ்தானும் ஆதரவளித்தது.

ஆனால், கடந்த மாதம் பாகிஸ்தான் எல்லை படை வீரர்கள் 23 பேரின் தலையை துண்டித்து தலிபான் தீவிரவாதிகள் கொன்றனர். அதனால் பாகிஸ்தான் அரசு பேச்சு வார்த்தையை முறித்து கொண்டது. இதற்கிடையில் கடந்த வாரம் பாகிஸ்தான் அரசோடு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்து தலிபான் தீவிரவாதிகள் ஒரு மாத போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

அதற்கு பதிலாக தலிபான்கள் மீதான வான்வழி தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் அரசும் அறிவித்தது. இருதரப்பும் முன்வந்த நிலையில் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது.

#TamilSchoolmychoice

முதல் கட்ட பேச்சு வார்த்தை முடிந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தை குழுவில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகானை, அவரது இல்லத்தில் இம்ரான்கான் பல முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அமைதி பேச்சு குழுவில் இடம்பெற வேண்டும் என்று தலிபான்கள் விரும்புகின்றனர்.

அதன்படி குழுவில் பங்கேற்க வேண்டும் என்று இம்ரான்கானை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கைபர்-பக்துன்கவா மாகாண முதல்வர் பர்வேஸ் கட்டாக் தலைமையில் அமைக்கப்படும் அமைதி குழுவில் தனது கட்சி சார்பில் குல்சார் கான் கலந்து கொள்வார் என்று நேற்று இம்ரான்கான் அறிவித்துள்ளார்.