Home இந்தியா தமிழக தொகுதிகளில் காங்கிரஸ் அமைச்சர்கள் போட்டியிட மறுப்பு!

தமிழக தொகுதிகளில் காங்கிரஸ் அமைச்சர்கள் போட்டியிட மறுப்பு!

607
0
SHARE
Ad

images (1)சென்னை, மார்ச் 13 – தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முந்தைய மற்றும் தற்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் போட்டியிட முடியாது என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு, கட்சியின் பலத்தை காட்டுவோம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் கூறினார். ஆனால், தான் தேர்தலில் போட்டியிடவில்லை, அனைத்து தொகுதிக்கும் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடப்போவதாக கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மத்தியில் காங்கிரஸ் அமைச்சர்கள் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ஜி.கே.வாசன், சிதம்பரம் மற்றும்

#TamilSchoolmychoice

முன்னாள் அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோரை தற்போதைய மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளராக நிறுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது காங்கிரஸ் அமைச்சர்களாக இருப்பவர்களும், முன்னாள் அமைச்சர்களும் தமிழகத்தில் போட்டியிட விரும்பவில்லை என்று தலைமையிடம் கூறியுள்ளனர். இத்தனை ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற காங்கிரசார் தனித்து நிற்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வெற்றி பெற்று பல ஆண்டுகளாக பதவியை அனுபவித்தவர்கள், தங்கள் சாதனையை கூறி ஓட்டு கேட்க வேண்டியதுதானே, ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கேள்வி எழுப்புவதுடன், தங்களது அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.