Home வணிகம்/தொழில் நுட்பம் கட்டணத்தை குறைக்கும் ஸ்பைஸ் ஜெட் இண்டிகோ விமான நிறுவனங்கள்!

கட்டணத்தை குறைக்கும் ஸ்பைஸ் ஜெட் இண்டிகோ விமான நிறுவனங்கள்!

683
0
SHARE
Ad

12-spice-je2-600டெல்லி , மார்ச் 13 – சூப்பர் ஹோலி சேல்ஸ்  மற்றும் பிளாஷ் சேல்ஸ் என்ற பெயரில் புதிய பயணக்கட்டண சலுகையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோடைகால விமான சேவைகளுக்கான பயணக் கட்டணத்தை ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் 3 முறை குறைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது 4-வது முறையாக சூப்பர் ஹோலி சேல்ஸ்  மற்றும் பிளாஷ் சேல்ஸ் என்ற பெயரில் பயணக் கட்டண சலுகையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் குறைத்துள்ளது. பயணச்சீட்டின் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

கட்டணத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடி தரும் இந்த சலுகைக்கான முன்பதிவு இன்று முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக முன்னணி சுற்றுலா மற்றும் பயண இணையதளங்கள் கூறுகின்றன. கட்டண சலுகையில் பயணம் செய்ய முன்பணம் செலுத்தும் முறையில் 90 நாட்களுக்கு முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்ய வேண்டும்.

#TamilSchoolmychoice

கோடைகாலத்தில் பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் மக்களுக்கு இதுவொரு வரப்பிரசாதமாகும். இதே போன்று தொழிற்போட்டியின் காரணமாக பல விமான நிறுவனங்கள் கட்டணச் சலுகையை அளிக்க தயாராகி வருகின்றன. சில நிறுவனங்கள் 75 சதவீதம் வரை கூட கட்டணத்தை குறைத்துள்ளன.