Home நாடு “போலி கடப்பிதழ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” – பதிலளிக்க காலிட் மறுப்பு

“போலி கடப்பிதழ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” – பதிலளிக்க காலிட் மறுப்பு

504
0
SHARE
Ad

khalidகோலாலம்பூர், மார்ச் 13 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் போலி கடப்பிதழ் மூலம் பயணம் செய்த இரு ஈரான் நாட்டவர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இரு ஈரானியர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? குடிநுழைவுத்துறையை கேளுங்கள் அல்லது குற்றத்தடுப்பு பிரிவை கேளுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

“இன்று நான் ஈரானியர்கள் குறித்து எந்த தகவலையும் கூற விரும்பவில்லை” என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், குடிநுழைவுத்துறை தலைவர் அலோயா மாமட்டும், இரு ஈரானியர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடிநுழைவுத்துறை அதிகாரிகள் முறையான நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி தான் அந்த இருவரின் ஆவணங்களையும் சோதனை செய்திருக்கிறார்கள் என்றும் அலோயா குறிப்பிட்டார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர் மலேசியாவிற்குள் நுழைந்து, திருடப்பட்ட இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாட்டின் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி, காணாமல் போன மாஸ் விமானத்திலும் பயணம் செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், அவர்கள் இருவரும் தீவிரவாதத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.