ஆனால் நேற்றுவரை ஊடகங்களிடம் பேசாத ஒபாமா, முதல் முறையாக இன்று ஊடகங்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, காணாமல் போன விமானத்தை தேடுவதே அமெரிக்காவின் முதல் நோக்கம் எனவும், MH370 விமானதில் பயணம் செய்த பயணிகளுக்காகவும், அவர்களது உறவினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
காணாமல் போன விமானத்திற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மற்ற நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன் என தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்க்காணலில் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய துணைக்கோளால் கண்டுபிடிக்கப்பட்ட இரு பொருட்கள் மாயமான மாஸ் விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற தற்போது தகவல் வெளியாகியுள்ளது.