வரும் மார்ச் 30 ஆம் தேதி, துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நட்பு ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களின் வாயிலாக சமூக ஆர்வலர்கள், அந்நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில், யூ-டியூப் (YouTube) இணையதளத்தில், அந்நாட்டு புலனாய்வுத்துறை தலைவர், அண்டை நாடான சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருடன் உரையாடுவது போன்ற காணொளி வெளியானது.
இதுபோன்ற விஷயங்கள் தன் வெற்றியை பாதிக்கும் என்பதால் துருக்கியின் பிரதமர் எர்டோகன், யூ-டியூப் (YouTube) ற்கு தடை பிறப்பித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே நட்பு ஊடகமான ‘டுவிட்டர்’ மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டு நீதிமன்றமொன்று கடந்த புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.