Home உலகம் துருக்கியில் யூ-டியூப் (YouTube)க்கும் வந்தது தடை!

துருக்கியில் யூ-டியூப் (YouTube)க்கும் வந்தது தடை!

677
0
SHARE
Ad

youtube-logo_large_verge_medium_landscapeதுருக்கி, மார்ச் 28 – துருக்கியில் யூ-டியூப் (YouTube) இணையதளத்திற்கு திடீர் தடை விதித்து அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றிய காணொளிக் காட்சிகள் யூ-டியூப் (YouTube) இணையதளத்தில் வெளியானதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

வரும் மார்ச் 30 ஆம் தேதி, துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நட்பு ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களின் வாயிலாக சமூக ஆர்வலர்கள், அந்நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில், யூ-டியூப் (YouTube) இணையதளத்தில், அந்நாட்டு புலனாய்வுத்துறை தலைவர், அண்டை நாடான சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருடன் உரையாடுவது போன்ற காணொளி வெளியானது.

#TamilSchoolmychoice

இதுபோன்ற விஷயங்கள் தன் வெற்றியை பாதிக்கும் என்பதால் துருக்கியின் பிரதமர் எர்டோகன், யூ-டியூப் (YouTube) ற்கு தடை பிறப்பித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ஏற்கனவே நட்பு ஊடகமான ‘டுவிட்டர்’ மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டு நீதிமன்றமொன்று கடந்த புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.