Home இந்தியா சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது! இறுதி நேரத் திருப்பம்!

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது! இறுதி நேரத் திருப்பம்!

543
0
SHARE
Ad

Chandrababu-Naidu-196புதுடில்லி, ஏப்ரல் 6 – நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஒரு முடிவுக்கு வந்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் ஆந்திராவில் பாஜக வலுவாகக் காலூன்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்கும் அதன் முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.ஆந்திராவில் மட்டும் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா மற்றும் சீமாந்திராவில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.

அதன்படி பாரதிய ஜனதாவுக்கு சீமாந்திராவில் 5 மக்களவைத் தொகுதிகள் 17 சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தெலுங்கானாவில் 8 மக்களவை தொகுதிகள், 47 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சந்திரபாபு கூறியுள்ளார்.

“குஜராத்தில் மோடி என்ன செய்தாரோ அதனை நாட்டுக்கும் செய்வார் என்று எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஜாதி மதம் பேதமின்றி எல்லா மக்களுக்கும் மேம்பாட்டைக் கொண்டு வருவார்” என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டணியைத் தொடர்ந்து பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்கும் என்றும் சந்திரபாபு கணித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசமாக இருந்த மாநிலம், இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாகியுள்ளது. முந்தைய ஆந்திரப் பிரதேசம் தற்போது சீமந்திரா என்று அழைக்கப்படுகின்றது.

தெலுங்கானாவில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 30ஆம் தேதியும், சீமந்திராவில் இரண்டாவது கட்டத் தேர்தல் மே 7 இல் நடைபெறும். இரண்டு மாநிலங்களிலும் சட்டமன்றங்களுக்கானத் தேர்தலும் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டணி மூலம் ஆந்திராவில் அதிகமான சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் சந்திரபாபு நாயுடு மீண்டும் சீமந்திராவின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

உடன்பாட்டின்படி சீமந்திராவில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 15 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். இந்த மாநிலத்தில் 175 சட்டமன்றங்களும், 25 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன.

தெலுங்கானாவில் பாஜக 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 47  சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். இந்த மாநிலத்தில் 119 சட்டமன்றங்களும், 17 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன.