Home உலகம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய பிரதமர் வெற்றி!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய பிரதமர் வெற்றி!

564
0
SHARE
Ad

e49846f8-0130-4276-8431-f515df7f6c9c_S_secvpfபிரான்ஸ், ஏப்ரல் 10 – பிரான்ஸ் நாட்டில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் அந்நாட்டின் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியது. மக்களின் அதிருப்தியை புரிந்து கொண்ட அதிபர் பிரான்சுவா ஒலாந்தே அமைச்சரவையை மாற்றியமைக்கும் திட்டத்தில் இறங்கினார்.

இதன் முதல்கட்டமாக அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜீன் மார்க் ஐரால்ட் பதவி இறக்கம் செய்யப்பட்டு, உள்துறை அமைச்சராக இருந்த மானுவல் வல்ஸ் பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிரான்சின் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முதலாக நேற்று நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட மானுவல் வல்ஸ் 306க்கு 239 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். 11 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

நாட்டில் முக்கிய பிரச்சனைகளாகக் கருதப்படும் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத் மந்தநிலை, மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருதல் போன்றவற்றை மாற்றிக் காட்டும் திட்டங்களை வல்ஸ் செயல்படுத்த இருப்பதாக ஒலாந்தே உறுதி அளித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும்கட்சிக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைத்தாலும், அவர் உறுதியளித்துள்ள பொருளாதாரத் திருப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து சந்தேகமே நிலவுகின்றது.

வரும் 2017-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 50 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான செலவுகளைக் குறைப்பதான அவரது திட்டம் வெற்றி பெற உறுப்பினர்களின் நம்பிக்கையை விட சிறந்த செயல்பாடுகள் தேவை.

கடந்த ஐந்து வருடங்களாக வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி வரும் பிரான்ஸ், ஐரோப்பிய யூனியனுடனான பொதுக் கடன், பெரும் உறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

கடந்த வருடங்கள் போலவே இம்முறையும், ஐரோப்பிய யூனியன் பிரான்சின் கடன் தொகைக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.