Home தொழில் நுட்பம் முப்பரிமாணத் திரையுடன் திறன்பேசிகள் – அமேசான் புதிய முயற்சி

முப்பரிமாணத் திரையுடன் திறன்பேசிகள் – அமேசான் புதிய முயற்சி

582
0
SHARE
Ad

3D phoneவாஷிங்டன், ஏப்ரல் 14 – ஆப்பிள் மற்றும் சாம்சங் திறன்பேசிகளுக்குப் போட்டியாக அமேசான் நிறுவனமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திறன்பேசிகள் தயாரிப்பில் களமிறங்குகிறது.

இந்நிறுவனம் தனது போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்க, தனது திறன்பேசிகளின் தயாரிப்பில் முப்பரிமாணத்தை (3D) வசதியைப் புகுத்தியுள்ளது.

இணைய வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவின் ‘அமேசான்’ (Amazon) நிறுவனம், சமீப காலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய FireTv, Kindle e-reader மற்றும் Fire Tablet வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் தொடர்ச்சியாக முப்பரிணாமத் திரையுடன் கூடிய திறன்பேசிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

அமேசானின் இந்த முயற்சிகள் பற்றி கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு யூகங்கள் பரவி வந்தாலும், அமேசானின் சமீபத்திய காலாண்டில் ஏற்பட்ட நஷ்டமும், விசாலமாகிக் கொண்டேபோகும் திறன்பேசிகளின் சந்தையும் அமேசானின் பார்வையை திறன்பேசிக்ளிடம் திருப்பியுள்ளது.

இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படலாம் என்றும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அமேசானின் 3-D திறன்பேசிகள் விற்பனைக்குவரும் என வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் போன்ற பத்திரிக்கைகள் ஆருடம் கூறுகின்றன.

சிறப்புக் கண்ணாடிகளை மட்டும் அணிந்து பார்க்கப்படும் முப்பரிமாணத்தை, திறன்பேசிகளின் புகுத்தும் அமேசானின் இந்த புதியமுயற்சி எத்தகைய வெற்றியை பெரும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.