Home உலகம் ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு!

ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு!

456
0
SHARE
Ad

663673-4827fcb8-cf4e-11e3-8fb0-f8d7f99ee21fபெர்த், ஏப்ரல் 29 – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று, இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு கிளம்பியது.

இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எனினும், விமான ஓட்டியின் திறமையால் எந்த விதமான சேதமும் இன்றி விமானம் உடனடியாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

எரிபொருள் தீப்பிடித்து எஞ்சின் எரியத் தொடங்கியதும் பயணிகளிடத்தில் பதற்றம் தோன்றியது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருக்க, விமானி திறமையாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் தரையிறக்கினார் என்று பயணிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்த விமானத் தீ விபத்து குறித்து அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறுகையில், “விமான என்ஜினில் பற்றிய தீ, விமானியால் அணைக்கப்பட்டு பரவாமல் தடுக்கப்பட்டது. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்பு வீரர்கள் அந்த விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தனர்”  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தீப்பிழம்புகள் தென்பட்டதும், மோசமான விபத்தாக இருக்கும் என்று முதலில் அஞ்சப்பட்டது.