Home நாடு எம்.எச். 370 விமானத்திற்கும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கும் தொடர்பா?

எம்.எச். 370 விமானத்திற்கும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கும் தொடர்பா?

545
0
SHARE
Ad

MAS MH 370 440 x 215கோலாலம்பூர், மே 5-  எம்.எச். 370 விமானம் மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் மலேசிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேருக்கும் காணாமல் போன விமானத்திற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்ற சந்தேகத்தைக் கிளப்பி, இலண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கிஇருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி தானியங்கி மனித இயந்திரம் போன்ற ரோபோவை கொண்டு நடந்து வரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை.

அல் கொய்தாவுடன் தொடர்பா?

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் குறித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு இந்த விமானம் தொடர்பில் இருக்கக்கூடும் என்ற ஆரூடம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் கொல்லப்பட்ட அனைத்துலக பயங்கரவாதியும், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனுமான பின்லேடனின் நெருங்கிய உறவினரான சாஜித் பாதத்  நியூயார்க் நீதிமன்றத்தில் பின்லேடன் மருமகன் மீது நடந்து வருகிற வழக்கில் அண்மையில் காணொளி (வீடியோ) மூலமாக சாட்சியம் அளித்தார்.

அந்த சாட்சியத்தில் அவர் ‘‘நான் ஆப்கானிஸ்தானில் மலேசிய புனிதப்போராளிகளை சந்தித்தேன். அவர்களில் ஒருவர் விமானி. அவர்களிடம் ஒரு விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்காக ஒரு காலணி வெடிகுண்டுகொடுத்தேன். அவர்கள் தங்களது அதிரடி நடவடிக்கையை நடத்துவதற்கு தயார்நிலையில் இருந்தனர்’’ எனக் கூறியிருக்கின்றார்.

மலேசிய விமானம் மாயமானதில் அதன்விமானியான கேப்டன் சஹாரி அகமது ஷாவுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என ஏற்கனவே சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்தே மலேசியாவில் உள்ள தீவிரவாதிகள் கைது செய்யப்படவேண்டும் என அமெரிக்கா (எப்.பி.ஐ.), இங்கிலாந்து (எம்–16) உளவுத்துறையினர் உள்பட சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மலேசியாவிடம் கோரிக்கை வைத்தன என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து 11 தீவிரவாதிகள் கோலாலம்பூரிலும், கெடாவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் 22 முதல் 55 வயது வரையிலானவர்கள்.

இவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், ஒரு இளம் விதவையும் அடங்குவர்.

மேற்கண்ட தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகிற டெய்லி மிர்ரர்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளால் எம்எச் 370 கடத்தப்பட்டதா? – டான்ஸ்ரீ காலிட் அபுபக்கார் மறுப்பு

Khalid abu Bakarஇதற்கிடையே, மலேசியாவில் கைது செய்யப்பட்ட 11 தீவிரவாதிகளுக்கும் டெய்லி மிர்ரர் வெளியிட்ட செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர் மறுத்துள்ளார்.

கடந்த வாரம் புக்கிட் அமானைச் சேர்ந்த சிறப்புக் குழு அந்த தீவிரவாதக் கும்பலை கைதுசெய்தது.

இத்தீவிரவாதிகளுக்கும் சிரியா, பிலிப்பைன்சில் உள்ள தலைமறைவு இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இக்கும்பல் இங்கிருந்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கின்றனரா என்பது குறித்து  தீவிர புலன் விசாரணை நடத்தப்படுவதாகவும் காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.