Home கலை உலகம் கோச்சடையான் படம் 3டிக்கு மாற்றுவதால் தாமதம் – சவுந்தர்யா ரஜினிகாந்த்

கோச்சடையான் படம் 3டிக்கு மாற்றுவதால் தாமதம் – சவுந்தர்யா ரஜினிகாந்த்

824
0
SHARE
Ad

soundarya rajinikanthசென்னை, மே 12 – ரஜினியின் கோச்சடையான் படம் வருகிற 23–ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தை கடந்த வெள்ளிகிழமை 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். இதற்காக விரிவான விளம்பரமும் செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் 6000 மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்தனர். தமிழ் நாட்டில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படம் வெளியாக வில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து தயாரிப்பு தரப்பில் கூறும் போது தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணத்தால் கோச்சடையான் படம் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

#TamilSchoolmychoice

தற்போது படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்தும் தாமதம் ஏன் என்பதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறும் போது, சில தொழில்நுட்ப காரணங்களினால் கோச்சடையான் படத்தை திரையரங்குக்கு 3டியில் மாற்றி குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர முடிய வில்லை.

வருகிற 23–ஆம் தேதி கோச்சடையான வெளியாகும். எல்லோருடைய ஆதரவும் எனக்கு தேவை என்று கூறியுள்ளார். தெலுங்கில் கோச்சடையான் விக்ரமசிங்கா என்ற பெயரில் வருகிறது. தெலுங்கு பதிப்புக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.