Home நாடு “சிவசுப்பிரமணியமும் ராமலிங்கமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – இளைஞர் பகுதி கோரிக்கை

“சிவசுப்பிரமணியமும் ராமலிங்கமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – இளைஞர் பகுதி கோரிக்கை

552
0
SHARE
Ad

MIC-Logo-300-X-200கோலாலம்பூர்மே 25– கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சோமசுந்தரம் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜை பதவி விலக வேண்டும் என அறிக்கை விட்ட மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியமும் அவருக்கு ஆதரவு தெரிவித்த மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ராமலிங்கமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என மஇகா இளைஞர் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

சிவராஜை பதவி விலகச் சொல்ல சிவசுப்பிரமணியத்திற்கு என்ன தகுதி உள்ளது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சோமசுந்தரத்திற்கு ஆதரவாக நேற்று முன்தினம் புத்ராஜெயாவில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவராஜ் தான் தூண்டுகோலாக இருந்ததாக எண்ணி அவரை பதவி விலகச் சொல்வது முட்டள்தானமானது என்றும் இளைஞர் பகுதியினர் கண்டனம் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜ் தலைமையில் மஇகா இளைஞர் அணியினர் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.  ஆனால் மஇகா இளைஞர் பிரிவின் மூலம் மஇகாவிற்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறியிருப்பது வேடிக்கையான ஒன்று என்றும் நேற்று மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த இளைஞர் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில்சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மஇகா ஒழுங்கு நடவடிக்கை குழு இதுவரையில் அவருக்கு ஏன் முறையான பதில் வழங்கப்படவில்லை என்பது குறித்து சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்புவதை விட்டுவிட்டு இதற்கெல்லாம் சிவராஜ் தான் காரணம் என்று கூறுவது எந்தவகையில் நியாயம் இருக்கிறது என்றும் இளைஞர் பகுதியினர் கேள்வி எழுப்பினர்.

சிவராஜ் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டதன் காரணமாக சிவசுப்பிரமணியமும் அவருக்கு ஆதரவு தெரிவித்த மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ராமலிங்கம் இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல்அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்குவோம் என்றும் மஇகா இளைஞர் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.