கடந்த இரண்டு மாத காலமாக சிறுநீரகக் கோளாறினாலும், நீரிழிவு நோயினாலும் அவதியுற்று வந்த சரவணனை அவரின் உறவினர்கள் அண்மையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (3-6-14) காலமானார்.
தனது 18 வயதில் அரசியலில் ஈடுபட்ட சரவணன் நீண்ட காலமாக மஇகாவில் இருந்து படிப்படியாக உயர்ந்து மாநிலத் தலைவராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ராஜேஸ் என்ற மனைவியும் 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர்.
அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று சுங்கைப் பட்டாணியிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.