Home நாடு கெடா மாநில முன்னாள் மஇகா தலைவர் வி.சரவணன் காலமானார்!

கெடா மாநில முன்னாள் மஇகா தலைவர் வி.சரவணன் காலமானார்!

569
0
SHARE
Ad

VSaravanan 1சுங்கை பட்டாணி, ஜூன் 4 – கெடா மாநிலத்தின் அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ வி.சரவணன் (வயது 67) நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார்.

கடந்த இரண்டு மாத காலமாக சிறுநீரகக் கோளாறினாலும், நீரிழிவு நோயினாலும் அவதியுற்று வந்த சரவணனை அவரின் உறவினர்கள் அண்மையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (3-6-14) காலமானார்.

#TamilSchoolmychoice

தனது 18 வயதில் அரசியலில் ஈடுபட்ட சரவணன் நீண்ட காலமாக மஇகாவில் இருந்து படிப்படியாக உயர்ந்து மாநிலத் தலைவராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ராஜேஸ் என்ற மனைவியும் 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று சுங்கைப் பட்டாணியிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.