Home உலகம் ஐ.நா. அமைதி குழுவிற்கு உறுப்பினராக முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி நியமனம்!  

ஐ.நா. அமைதி குழுவிற்கு உறுப்பினராக முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி நியமனம்!  

443
0
SHARE
Ad

unநியூயார்க், ஜூன் 6 – ஐ.நா.சபையின் அமைதி பாதுகாப்புக் குழுவில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி அபிஜித் குஹா, ஐந்து பேர் உறுப்பினர்களாகக் கொண்து செயல்படும் ஐ.நா. வின் அமைதி பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா.வின் அமைதி காக்கும் நடவடிக்கை மற்றும் இதற்கான ஆதரவுப் பிரிவு போன்றவற்றின் செயலர்களாக விளங்கும் ஹெர்வ் லட்சஸ், அமீரா ஹக் ஆகியோர் இவரை அமைதிக் குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அமைதி நடவடிக்கை துறையில் இணை ராணுவ ஆலோசகராகவும் அதன்பின்னர் அத்துறையின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்தக் குழு ஐ.நா.வின் அமைதி குழுவில் இணைந்துள்ள உறுப்பு நாடுகளுக்குப் பயணங்ள் மேற்கொண்டு அவர்களுடன் பாதுகாப்பு பணி குறித்து விவாதிக்கும். அது மட்டுமின்றி, அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் தொழில் துறை தலைவர்கள் போன்றவர்களுடன் அமைதி பணி குறித்த செயல் விவாதங்களில் இந்தக் குழு ஈடுபடும்.

இந்தக் குழு இம்மாதம் தனது பணியைத் தொடங்கி நவம்பர் மாதம் இறுதியில் தங்கள் அறிக்கையை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் ஐ.நா.வின் அமைதிப் பணி அமைப்பானது நீண்ட கால அடிப்படையில் ஒருங்கிணைந்த முறையான பலன்களை பெறும் வழிகள் குறித்து பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.