Home உலகம் ஐ.நா. பொதுச்சபை தலைவராக உகாண்டா வெளியுறவுத்துறை அமைச்சர் தேர்வு!

ஐ.நா. பொதுச்சபை தலைவராக உகாண்டா வெளியுறவுத்துறை அமைச்சர் தேர்வு!

474
0
SHARE
Ad

628x471நியூயார்க், ஜூன் 14 – ஐ.நா. பொதுச்சபை தலைவர் பதவிக்கு உகாண்டா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சாம் குட்டேசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர் வரும் செப்டம்பர் மாதம் இவர் தலைமையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டா நாட்டின் வெளியுறவுத் துறையின் அமைச்சராக செயல்படும் குட்டேசா, உகாண்டாவில் ஓரின சேர்க்கை திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். மேலும் உகாண்டாவில் இவ்வகை திருமணத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்ற காரணமாக இருந்தவர்.

இதனை மேற்கத்திய நாடுகள், கடுமையாக விமர்சித்த சூழலிலும், சாம் குட்டேசா ஐ.நா. பொதுச்சபை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

ஐ.நா. பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி சாம் குட்டேசா கூறுகையில், “பாலின சமத்துவம், பெண்கள் உரிமை, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து உழைப்பேன்” என்று உறுதி கூறியுள்ளார்.