Home கலை உலகம் கையில் பச்சைக் குத்திய பிரபுதேவா பெயரை அழிக்க அறுவைச் சிகிச்சை – நயன்தாரா!

கையில் பச்சைக் குத்திய பிரபுதேவா பெயரை அழிக்க அறுவைச் சிகிச்சை – நயன்தாரா!

581
0
SHARE
Ad

nayantharaசென்னை, ஜூன் 14 – தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.

பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் ‘பிரபு’ என்று பச்சை குத்திக் கொண்டார். எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்.

அவர் நடித்த சில படங்களிலும், பொது இடங்களிலும் அந்த ‘பச்சை’யை பச்சையாகப் பார்க்க முடிந்தது. தடாலென ஒரு நாள் இருவருக்கும் காதல் முறிந்தது. இப்போது மீண்டும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு, பிரபு என்ற அந்தப் பச்சை பெரும் இம்சையாக இருக்கிறதாம்.

#TamilSchoolmychoice

இயக்குநர்கள் தயங்கித் தயங்கி, மேடம் அந்த பச்சையைக் கொஞ்சம் மறைச்சா நல்லது என்று சொல்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்தப் பச்சையை மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டார்.

லேசர் சிகிச்சை மூலம் அந்தப் பச்சையை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து பிரபு பச்சை காணாமல் போயிருக்குமாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.