Home உலகம் ராஜபக்சேவிற்கு பொலிவியாவின் அமைதிக்கான விருது – ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி!

ராஜபக்சேவிற்கு பொலிவியாவின் அமைதிக்கான விருது – ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி!

541
0
SHARE
Ad

MR-Mahindaஸூகர், ஜூன் 14 – இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு பொலிவிய அரசின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட இருக்கின்றது.

ஜி77 நாடுகளின் உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.  ஜி77 அமைப்பின் தற்போதைய தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான இவோ மோரேல்ஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள், ஆகியோரும் இதில கலந்து கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

வரும் ஞாயிற்றுக்கிழமை இம்மாநாட்டில் ராஜபக்‌ஷே உரையாற்றுகிறார். அப்போது அவருக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் ராஜபக்சே போர் குற்றம் செய்ததாக கூறி வரும் நிலையில் பொலிவியாவின் அமைதிக்கான விருது வழங்கப்படுவது, ஈழத் தமிழர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.