Home வணிகம்/தொழில் நுட்பம் சீனா, ஆஸ்திரேலியா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்!

சீனா, ஆஸ்திரேலியா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்!

564
0
SHARE
Ad

abbபெய்ஜிங், ஜூன் 25 – சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இரு தரப்பு தடையில்லா வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்து ஆகும் என்று கூறப்படுகின்றது.

ஆசியா கண்டத்தில் சிறப்பான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் சீனா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே சிறப்பான வர்த்தக உறவினை ஏற்படுத்திக் கொண்டது. அதன் காரணமாக சமீபத்தில் பிரிட்டன் மற்றும் சீனாவிற்கு இடையே நேரடி பணப் பரிமாற்றம் செய்யும் வசதி நடைமுறைக்கு வந்தது.

அதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது வர்த்தக நிலைப்பாட்டை நிலைநிறுத்திய சீனா, தற்போது ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தத்திற்கு தயாராகி வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையின் அமைச்சர் ஆண்ட்ரு ராப் கூறுகையில், “இரு நாடுகளும் தடையில்லா வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்ள முனைப்பாக உள்ளன. விவசாயம் உட்பட பெரும்பாலான துறைகளில் வர்த்தகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் (படம்), சீனாவுடனான இந்த வர்த்தகத்தை தான் மிகவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.