Home உலகம் ஒரு பெண் அமெரிக்க அதிபராக வேண்டும் – மிஷெல் ஒபாமா!

ஒரு பெண் அமெரிக்க அதிபராக வேண்டும் – மிஷெல் ஒபாமா!

507
0
SHARE
Ad

Michelle and Hillary 223வாஷிங்டன், ஜூன் 25 – அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

“யாரால் திறம்பட செயல்பட முடியுமோ, அவரை அதிபராக தேர்வு செய்ய நாடு தயாராக உள்ளது.”

#TamilSchoolmychoice

“அதிபராக தேர்தெடுக்கபடுபவரின் நிறமோ, பாலினமோ, அவர்களின் பின்னணியோ அல்லது சமூக பொருளாதார நிலையோ முக்கியமில்லை.” என்று கூறினார்.

மேலும் அவர், அமெரிக்கர்கள் வெகுவிரைவில் ஒரு பெண்னை அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுப்பர் என நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மிஷெல் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.