Home கலை உலகம் படம் பார்க்க சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஹன்சிகா!

படம் பார்க்க சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஹன்சிகா!

650
0
SHARE
Ad

hanshikaசென்னை, ஜூன் 28 – சினிமா பார்க்க சென்ற ஹன்சிகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். நடிகை ஹன்சிகா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக “ரோமியோ ஜூலியட்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அதே வளாகத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கச் சென்றார். உடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் தனியாக சென்ற அவரை அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

அவரை தங்களது செல்பேசியில் படம்பிடிக்க தொடங்கினார். இதனால் நெரிசல் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஹன்சிகாவை பார்க்கும் ஆர்வத்தில் அவர் மீதும் ரசிகர்கள் விழத் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

நிலைமையை சமாளித்த ஹன்சிகா தனது தத்துத் தமிழில் ரசிகர்களிடம் பேசி அவர்களை கவர்ந்தார்.  ஒரு சிலரின் உதவியுடன் அங்கிருந்து பிறகு வெளியேறினார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, “சினிமா பார்க்க சென்றபோது என்னை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

தனியாக எந்த நிலைமையையும் சமாளிக்கும் துணிச்சல் எனக்கு இருக்கிறது. என்னிடம் ரசிகர்கள் யாரும் வம்பு செய்யவில்லை. அவர்களிடம் நான் தமிழில் பேசினேன். என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள்” என்றார் ஹன்சிகா.