ரியோ டி ஜெனிரோ, ஜூலை 4 – உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
இன்று நடைபெறும் பிரான்ஸ்-ஜெர்மனி நாடுகளுக்கிடையிலான முதல் ஆட்டம் மலேசிய நேரப்படி நள்ளிரவு தொடங்குகின்றது.
பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஜெர்மானிய காற்பந்து விளையாட்டாளர்கள்….
இரண்டாம் உலகப் போரின் போது, பிரான்சை ஆக்கிரமிக்க முயற்சித்த நாடு ஜெர்மனி என்பதாலும், பின்னர் அமெரிக்காவின் படைகள் பிரான்ஸ் நாட்டின் நோர்மாண்டி கடற்கரையில் தரையிறங்க அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து ஜெர்மனியை இரண்டாம் உலகப் போரில் தோற்கடித்தன என்பதாலும்,
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பகைமை சரித்திரப் பிரசித்திப் பெற்றது.
அதே பகைமை, அடிக்கடி காற்பந்து அரங்கங்களிலும் அவ்வப்போது தோன்றும்.
காற்பந்து உலகில் பரம வைரிகளாகத் திகழும் இந்த இரண்டு நாடுகளும் இன்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் களம் காண்கின்றன.
இன்றைய போட்டிக்குத் தயாராகும் குழுக்களின் படக் காட்சிகள்:
ஜெர்மன் பயிற்சியாளர் ஜோசிம் லோயூ – ஜெர்மனி குழுவுக்கு பயிற்சி வழங்குகின்றார்
பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரான்ஸ் காற்பந்து குழுவினர்…
தனது குழுவின் ஆட்டம் குறித்த விளக்கங்களை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழங்கும் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்
அதிக கோல்களை அடிக்கும் சாதனையை நிகழ்த்த பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஜெர்மனியின் தோமஸ் முல்லர் (வலது)
படங்கள் : EPA