பிரேசில், ஜூலை 14 – உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஒரு நிறைவை நாடிவிட்டாலும், அதன் நினைவுகள் காற்பந்து இரசிகர்களின் மனங்களில் இருந்து விலக நீண்ட நாட்களாகும் – அல்லது விலகாமல் என்றும் நின்று நிலைத்திருக்கும்.
காற்பந்து அரங்கங்களுக்கு வருகை தந்து வித்தியாச உடைகள் – ஒப்பனைகளுடன் கண்களுக்கு விருந்து படைத்த காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்களின் இன்னொரு தொகுப்பு இதோ, தொடர்கின்றது:
கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற கிரீஸ்-ஐவரி கோஸ்ட் இடையிலான ஆட்டத்தின் போது நினைவுக்காக தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ளும் காற்பந்து இரசிகைகள்..
ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற ஜப்பான்-கொலம்பியா இடையிலான ஆட்டத்தின் போது கொலம்பியாவுக்கு ஆதரவாகத் திரண்ட கொலம்பிய இரசிகைகள்…
ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற ஜப்பான்-கொலம்பியா நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தின்போது விளையாட்டு நட்பைக் காட்டும் வண்ணம் ஜப்பான் நாட்டு இரசிகருடன் கைகோர்க்கும் கொலம்பியா இரசிகைகளின் அழகுக் காட்சி…
ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற பிரேசில்-நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தின்போது பிரேசில் கொடிகளை ஏந்தியும் – பிரேசில் நாட்டின் தேசிய வண்ணத்திலான ஆடைகள் அணிந்தும் அரங்கத்திற்குள் நுழையும் ஆரணங்குகள்…
நேற்று ஜூலை 13ஆம் தேதி ஜெர்மனி – அர்ஜெண்டினா இடையிலான இறுதி ஆட்டம் ரியோ டி ஜெனிரோ நகரின் மராக்கானா அரங்கத்தில் தொடங்குவதற்கு முன்னால் புகைப்படக்காரர்களுக்கு அழகு காட்டி நிற்கும் அர்ஜெண்டினா இரசிகை ஒருத்தி…
படங்கள் : EPA