Home இந்தியா தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்!

674
0
SHARE
Ad

vijayakaanthசென்னை, ஜூலை 14 – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்களவை தேர்தல் முடிவுக்குப்பிறகு கட்சி தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்டு வந்தார். தொடர் சுற்றுப்பயணம், ஓய்வின்மை காரணமாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9–ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.

vijayakanth_1695834gஇந்நிலையில் விஜயகாந்த் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார். அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice