சொந்த விஷயம் காரணமாக சமந்தா 3 நாள் விடுமுறை வேண்டும் என்று பட இயக்குநரிடம் கேட்டார். அதற்கு இயக்குநர் சம்மதம் தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் கோபமடைந்தாராம்.
இந்நிலையில் பட இயக்குனர் சமந்தாவை தொடர்புகொண்டு படம் முடிவடையும் தருவாயில் விடுப்பு தர முடியாது. படப்பிடிப்பிற்கு வந்துவிடுங்கள் என்றார். இதை கேட்ட சமந்தா கோபம்டைந்தார்.
தனது விடுமுறை கிடைக்காததற்கு காரணம் ஜூனியர் என்டிஆர்தான் என சகதோழிகளிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம் சமந்தா. இந்நிலையில் வரும் 17-ஆம் தேதி நடக்கும் “அஞ்சான்” பட இசை நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.