அமெரிக்கா – சீனா இடையேயான நல்லுறவு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது தொடர்பான 6-வது மாநாடு பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி இரு நாட்டு உயர் அதிகாரிகள் கூட்டத்தில், சீன அதிபர் ஜீ ஜிங்பின் கூறியதாவது;- “பல்வேறு விவகாரங்களில் நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையால் இரு நாடுகளுக்கான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
“பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது இயல்பான ஒன்றுதான். இவை அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்” என்று கூறியுள்ளார்.