Home உலகம் அமெரிக்கா-சீனா இடையே நிலையான நல்லுறவினை ஏற்படுத்த முயற்சி!

அமெரிக்கா-சீனா இடையே நிலையான நல்லுறவினை ஏற்படுத்த முயற்சி!

562
0
SHARE
Ad

Chinaபெய்ஜிங், ஜூலை 11 – அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாய் நிலவி வரும் வெறுப்புணர்ச்சியை போக்க இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா – சீனா இடையேயான நல்லுறவு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது தொடர்பான 6-வது மாநாடு பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி இரு நாட்டு உயர் அதிகாரிகள் கூட்டத்தில், சீன அதிபர் ஜீ ஜிங்பின் கூறியதாவது;- “பல்வேறு விவகாரங்களில் நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையால் இரு நாடுகளுக்கான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

china_and_us_flagஇந்த பாதிப்பு உலக அளவில் எதிரொலிக்கும். இரு நாடுகளும் பரஸ்பரம் மற்ற நாட்டின் இறையாண்மை மற்றும் வளர்ச்சிப் பாதையை மதித்து நடக்க வேண்டும்.”

“பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது இயல்பான ஒன்றுதான். இவை அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்” என்று கூறியுள்ளார்.