தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.
* தினமும் ஒரு பேரீச்சைம்பழம் சாப்பிட்டு வந்தால், இதயம் வலுப்பெறும்.
* தினமும் இரண்டு பேரீச்சைபழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியடையும்.
* இனிப்பு உணவுகளை தவிர்க்கும் சர்க்கரை நோயாளிக்கூட தாராளமாக பேரீச்சம்பழம் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு டம்ளர் பாலுடன் 1 (அ) 2 பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர, உடல் வலிமை பெறும்.
* எதிர்பாராத சில சம்பவங்களால் அதிகமான ரத்தத்தை இழந்தவர்கள், தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடு செய்யலாம்.
* பேரீச்சம்பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.