காஸா, ஜூலை 12 – பாலஸ்தீன் ஹமால் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதலில், கடந்த 4 நாட்களில் மட்டும் 103 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமால் தீவிரவாதிகளின் நிலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கல் குண்டு வீசி தாக்கி வருகின்றன.
மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஹமால் தீவிரவாதிகளின் 300 மறைவிடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியதில் 31 பேர் பலியானார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமால் தீவிரவாதிகள் ராக்கெடுகளை வீசினர். மேலும் தெற்கு இஸ்ரேலில் அணு உலை அமைந்துள்ள டிமோனா நகரம் மீதும் 3 ராக்கெட்டுகள் வீசப் பட்டன.
இந்த குண்டு வீச்சில் அணு உலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழு தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரம் சிறிய இந்தியா என அழைக்கப்படுகிறது. காரணம் அங்கு சுமார் 7,500 இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் யூசர்கள் ஆவர்.அவர்கள் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக ஐநா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.