அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை. ‘அஞ்சான்’ பட வெளியீட்டை முன்னிட்டு சூர்யா விரைவில் ஆரம்பிக்கப் போகிறார். அதே சமயம், அஜித், விஜய் ரசிகர்கள் அவர்களது அபிமான நட்சத்திரங்களின் பெயரில் பல டுவிட்டர் கணக்கை நடத்தி வருகிறார்கள்.
‘கோச்சடையான்’ பட வெளியீட்டின் போது ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அந்த பரபரப்பு சில நாட்களிலேயே அடங்கி விட்டது. படம் வெளியான பின் டுவிட்டரில் ரஜினி எந்த கருத்தையும் பகிரவில்லை.
பெரும்பாலும் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களில் நடிகைகள்தான் அதிகம் டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் சமந்தா, த்ரிஷா குறிப்பிட வேண்டியவர்கள்.
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை ஸ்ருதிஹாசன் அதிகமான டுவிட்டர் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10,22,000 பேர்.
தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பவர் தனுஷ், அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 8,69,000 மாம். நாம் தேடிப் பார்த்தவரையில் இவர்தான் தமிழ் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார்.
டுவிட்டரை அதிகம் பயன்படுத்தும் ஒரு சில நட்சத்திரங்களின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை இதோ…
நடிகர்கள்:
தனுஷ் – 8,69,000
ரஜினிகாந்த் – 7,59,000
சிவகார்த்திகேயன் – 4,14,000
சரத்குமார் – 1,37,000
விவேக் – 44,000
சந்தானம் – 41,300
வடிவேலு – 36,000
நடிகைகள்:
ஸ்ருதிஹாசன் – 10,22,000
த்ரிஷா – 9,00,000
சமந்தா – 6,46,000
பிரியா ஆனந்த் – 4,83,000
பிரியாமணி – 3,96,000
குஷ்பு – 2,26,000