Home உலகம் ஐநா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வெட்கக் கேடானது – ஐ.நா. பொது செயலாளர்...

ஐநா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வெட்கக் கேடானது – ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன்!

679
0
SHARE
Ad

Ban-Ki-moon,காசா, ஜூலை 31 – காசா பகுதியில் சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகினர்.

இஸ்ரேலின் கண்மூடித்தனமான இந்த தாக்குதலுக்கு ஐ.நா.பொது செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

gaza“வடக்கு காசாவில் ஐ.நா. நடத்தி வரும் ஜபாலியா பெண்கள் துவக்கப் பள்ளியில் அப்பாவி மக்கள் பலர் தஞ்சமடைந்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ராணுவத்துக்கு இது வரை 17 முறை தெரியபடுத்தியும், இஸ்ரேல் ராணுவம் அப்பளியின் மீது நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம் வெட்கக் கேடானதாகும். நியாயப்படுத்தவே முடியாத இந்த கொடூரமான தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.”

#TamilSchoolmychoice

“இந்த தாக்குதலை துணிந்து நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக, தாக்குதல்களைக் கைவிட்டு, இரு தரப்பினரும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும்”.

gaza_1“இந்த மோதலுக்கான காரணம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமைதிப் பேச்சு வார்த்தையின் மூலமே அவற்றுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1200 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.