பலரும் அதை ஒரு காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை, வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே.
‘‘மருத்துவர்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைக்க உதவும். ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. வயிற்று வலி பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
பூசணிக்காயில் 96 சதவிகிதம் தண்ணீர் சத்து உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.