Home வாழ் நலம் சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்கும் பூசணிக்காய்!

சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்கும் பூசணிக்காய்!

1261
0
SHARE
Ad

jap-pumpkinஆகஸ்ட் 14 – பூசணிக்காய் என்றதும் நமக்கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினைவுக்கு வரும். மற்றவரது திருஷ்டிகளை எல்லாம் தன் மேல் ஏற்றிக்கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூசணிக்காய்க்கோ, அதை உடைப்பவர்களுக்கோ அதன் நற்குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பலரும் அதை ஒரு  காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை,  வெள்ளை பூசணிக்குள்  ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான  மருத்துவக் குணங்களே.

‘‘மருத்துவர்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன்   குறைக்க உதவும். ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய  இடமுண்டு. வயிற்று வலி பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு  மாமருந்து.

#TamilSchoolmychoice

pumpkinnவயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு  திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும்  நீக்கி, அப்படியே அரைத்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்று வலி தீரும்.

பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு  பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.

pumpkin,100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48  கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார்  வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பூசணிக்காயில் 96 சதவிகிதம் தண்ணீர் சத்து உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.