Home நிகழ்வுகள் ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி

ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி

622
0
SHARE
Ad

johor-flagஜொகூர், பிப்.21- ஜோகூரில் வேலை வாய்ப்புக் கண்காட்சி வரும் 23.2.2013 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழும்.

இக்கண்காட்சி புக்கிட் கம்பீர் டேவான் செர்பாகுனா என்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஜோகூர் மாநில மனித வள ஆட்சிக் குழு உறுப்பினர் மு.அசோகன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அரசாங்க தனியார் துறைகளில் சுமார் ஆயிரம் வேலைகள் காலியாக உள்ளன, இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேர்முகத் தேர்வு நடைபெறும் போது அடையாள அட்டையுடன் கல்விச் சான்றிதழையும் உடன் கொண்டு வர வேண்டும்.

தனியார் நிறுவனத்தின்  நேர்முகத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான மு.அசோகன் இந்திய இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.