ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் தம்படம் எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் ஐந்தாவது மிக உயர்ந்த கட்டடமான 1,135 அடி உயரமுடைய தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர் மீது ஏறி நின்றபடி தம்படம் எடுத்துள்ளனர்.
இவர்கள் தம்படம் எடுக்கும் காணொளி தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது. இதுவரையில் எடுக்கப்பட்ட தம்படங்களில் இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது என்று இணையவாசிகளால் கூறப்படுகிறது.
Comments