Home நாடு கவிப்பேரரசு வைரமுத்து பிரத்தியேக காணொளி நேர்காணல்!

கவிப்பேரரசு வைரமுத்து பிரத்தியேக காணொளி நேர்காணல்!

611
0
SHARE
Ad

Vairamuthu Exclusive

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின்  அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கியதோடு, அவருக்கு சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு குறுகிய அவகாசத்தில் செல்லியல் இணையத்தளம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரத்தியேக காணொளி நேர்காணல் ஒன்றை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

அதில் தனது மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு வழங்கப்பட்ட விருது குறித்தும், தனது அடுத்த படைப்பும் குறித்தும், செல்லியல் தகவல் ஊடகம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து வழங்கிய அந்த பிரத்தியேக நேர்காணலின் காணொளியை கீழே உள்ள இணைப்பின் வழியாகக் காணலாம்