Home நாடு தன்னார்வ படைக்கு 1.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடா? மறுக்கிறார் பினாங்கு முதல்வர்

தன்னார்வ படைக்கு 1.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடா? மறுக்கிறார் பினாங்கு முதல்வர்

533
0
SHARE
Ad

Lim Guan Engபட்டர்வொர்த், செப். 7 – பினாங்கு மாநிலத்தின் தன்னார்வ தொண்டூழியப் படைக்கு 1.5 பில்லியன் ரிங்கிட் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுவதை பினாங்கு முதல்வர் லிம் குவான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அம்னோ அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகவல் தவறானது என்றும்,தன்னார்வ தொண்டூழியப் படைக்கு அவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கும் அளவுக்கு மாநில அரசாங்கத்திடம் நிதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“மாநிலத்தின் கையிருப்பு (ரிசர்வ்) தொகை என்பது 1.2 பில்லியன்மட்டுமே… இந்நிலையில் வெ.1.5 பில்லியன் தொகையை எப்படி ஒதுக்க முடியும்? தன்னார்வ தொண்டூழியப் படைக்கு அவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கி இருப்பதாகபினாங்கு அம்னோ நிரூபித்தால், ஒட்டுமொத்த மாநில அரசாங்கமும் ராஜினாமா செய்யத் தயார்,” என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது அறிவித்தார் முதல்வர் லிம் குவான்.

#TamilSchoolmychoice

தன்னார்வ தொண்டூழியப் படையை அமைக்க மாநில அரசு வெ.1.5 பில்லியன் தொகையை ஒதுக்கி இருப்பதாக பினாங்கு அம்னோ தலைவர் டத்தோ சைனால் அபிடின் ஓஸ்மான் தெரிவித்ததாக அம்னோ அகப்பக்கத்தில் கடந்த 4ஆம் தேதி செய்தி வெளியானது.

தான் கூறியதை நிரூபிக்க டத்தோ சைனால் அபிடினுக்கு 3 நாள் அவகாசம் அளிக்கப் போவதாகக் குறிப்பிட்ட லிம் குவான், அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே தன்னார்வ தொண்டூழியப் படையை தற்காக்கும் விதமாக மாநில அரசு நீதிமன்றத்தை அணுகும் என்று குறிப்பிட்ட முதல்வர் லிம் குவான், 4ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் படையை உருவாக்க மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

1996ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ், தன்னார்வ தொண்டூழியப் படை பதிவு செய்யப்படவில்லை என்பதால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அப்படையைச் சேர்ந்த 156 பேரை காவல்துறை தடுத்து வைத்து பின்னர் விடுதலை செய்துள்ளது.